கடலுார்-கடலுாரில் பழங்குடியின மாணவர்கள் ஜாதி சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடந்தது.கடலுார் பாதிரிக்குப்பம் ஊராட்சி காந்தி நகரில் பழங்குடியின மாணவ, மாணவிகள் வசிக்கின்றனர். அவர்கள் ஜாதி சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் நடந்தது. தாசில்தார் பலராமன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் தேன்மொழி, வி.ஏ.ஓ., லட்சுமிதேவி முன்னிலை வகித்தனர். முகாமில், பழங்குடியின மாணவ, மாணவிகள் 15க்கும் மேற்பட்டோர் ஜாதி சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பத்தை தாசில்தார் பலராமனிடம் வழங்கினர். அப்பகுதியை சேர்ந்த வீடு, நிலம் இல்லாத ஏழை எளிய மக்கள் தங்களுக்கு பட்டா வழங்க கோரி மனு அளித்தனர். நிகழ்ச்சியில் பாதிரிக்குப்பம் ஊராட்சி தலைவர் சரவணன், ஒன்றியக் கவுன்சிலர் கிரிஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.