கடலுார்-கடலுார் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 162 ஏற்கப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் காலியாக உள்ள 5 ஒன்றிய கவுன்சிலர்கள், 10 ஊராட்சித் தலைவர்கள், 33 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட 48 பதவிகளுக்கான தேர்தல் வரும் அக்., 9ம் தேதி நடக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் வரையில் நடந்தது.ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 51 பேரும், ஊராட்சித் தலைவருக்கு 53, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 59 பேர் உட்பட 163 பேர் மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் முடிந்ததையடுத்து நேற்று மனுக்கள் பரிசீலனை நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தாக்கல் செய்த ஒரு மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 162 மனுக்கள் ஏற்கப்பட்டது. நாளை (25ம் தேதி) மனுக்களை வாபஸ் பெறுதல் நடக்கிறது.