'மாணவர்களுக்கு விசாலமான பார்வை வேண்டும்': மனநல பிரிவு உதவி பேராசிரியர் ஆலோசனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
05:33

திண்டுக்கல் : 'மாணவர்கள் தங்கள் பார்வையை விசாலமாக்குவதன் மூலம் தேர்வு பயம், தற்கொலை எண்ணம் வராமல் தவிர்க்கலாம்' என திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மனநல பிரிவு உதவி பேராசிரியர் டீன் வெஸ்லி கூறினார்.



அரசு மருத்துவமனையில் மனநலத்துறை செயல்பாடு எப்படி உள்ளதுதிண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநல சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்படுகிறது. குடிபோதை தடுப்பு பிரிவு, குழந்தைகளுக்கு மற்றும் முதியவர்களுக்கான தனித்தனி மனநலம் காக்கும் பிரிவு, கவுன்சிலிங் சென்டர், குழந்தைகளுக்கான ஆரம்ப தலையீட்டு மையம் போன்றவை தினமும் ஒவ்வொரு பிரிவாக செயல்படுகிறது. உள்நோயாளிகள் பிரிவும் உள்ளது. பாதிப்புக்கு ஆளானவரை முறையாக கண்காணித்து அதற்குத் தகுந்தாற் போல் சிகிச்சை அல்லது ஆலோசனை வழங்கப்படுகிறது.



மன அழுத்தம் எவ்வாறு ஏற்படுகிறது



மன அழுத்தம் தற்போதைய கொரோனா காலத்தில் பொதுவான ஒன்றாகி விட்டது. பெரும்பாலானோர் பதட்டத்துடனும், பயத்துடனுமே இருக்கின்றனர். குறிப்பாக ஐ.டி. தொழிலில் உள்ளவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவோர் அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பணிச்சுமை, குழந்தைகளை சரிவர கவனிக்க முடியாதது, குடும்ப பிரச்னை போன்றவை மன அழுத்தத்திற்கு காரணமாகின்றன. சுற்றுப்புறத்தில் இருந்து வரும் கூடுதல் சுமை அல்லது அழுத்தம் மனச்சுமைக்கு காரணமாகிறது. அதனால் நிலையில்லா மனநிலை தன்மையோடு இருக்கின்றனர். இவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது.



மன அழுத்தத்தில் இருந்து விடுபட எளிய வழிகள் ஏதும் உள்ளனவா



முதலில் நல்ல ஒரு மனப்பான்மையோடு இருக்க வேண்டும். அதாவது என்னால் முடியும். முடியாததென ஒன்றில்லை என்பது போன்ற நேர்மை எண்ணங்களோடு (பாசிட்டிவ்) இருக்க வேண்டும். சூழலுக்கு ஏற்றாற்போல் வளைந்து கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எச்சூழலையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடின எண்ணங்களில் இருந்து மனதை திசை திருப்ப வேண்டும். அதாவது விளையாட்டு, இசை, இறைவழிபாடு, உடற்பயிற்சி, குழந்தைகளிடம் நேரத்தை செலவிடுவது, பிடித்த ஒன்றை செய்வது போன்றவற்றால் அழுத்தம் ஏற்படும் போது மனதை திசை திருப்ப வேண்டும்.



உதாரணமாக ஊரடங்கு நேரங்களில் குடும்ப பிரச்னையால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்களுக்கு வல்லுனர்கள் கூறுவது, வேலை முடிந்த பின் இரவு நேரத்தில் கணவன், மனைவி மற்றும் வீட்டில் உள்ளோர் அலைபேசி, தொலைக்காட்சிகளை தவிர்த்து, கேரம் போர்டு போன்ற உள் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள் என அறிவுறுத்தினோம். இது நல்ல பலனை அளித்தது. பலர் அழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.



தேர்வு பயத்தால் தற்கொலை எண்ணம் தோன்றுமா



மாணவ, மாணவியருக்கு சிறு வயதிலிருந்தே டாக்டர், கலெக்டராகணும் என எண்ணம் உருவாகிவிடுகிறது. இது பரந்து விரிந்த உலகம். மாணவர்கள் தங்கள் பார்வையை, எண்ணங்களை விசாலமாக்க வேண்டும். எண்ணற்ற துறைகள் உள்ளன. சாதிக்க தேர்வு மட்டுமே உள்ளது என கருதுவது தவறு. எந்த படிப்பானாலும் போட்டி, பொறாமை இன்றி சந்தோஷமாக, ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும். அதேநேரத்தில் இதில் ஆசிரியர்கள், பெற்றோருக்கும் பொறுப்பு உண்டு. மாணவர்களுக்கு கற்பிக்கும்போதே தோல்வி, தற்கொலை போன்ற எண்ணங்கள் அர்த்தமில்லாதவை, தவறானவை என்ற விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். இதனை தனிப்பாடமாகவும் நடத்தலாம். பெற்றோர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களை மனம் இளகிவிட காரணமாகி விடக் கூடாது. விழிப்புணர்வும், ஊக்குவிப்பும் இருந்தால் போதும், தற்கொலை எண்ணமே வராது.



மனநல ஆலோசனைக்கு அரசின் 104 இலவச அழைப்பு எண் திட்டம் பற்றி



இந்த திட்டம் துவங்கியதில் இருந்து வரும் அழைப்புகள் மூலம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் பேசி வருகிறோம். போதிய அறிவுரைகள் வழங்குகிறோம். அதேநேரம் அவர்களை தொடர்ந்து கண்காணித்தும் வருகிறோம்.



தற்கொலை எண்ணத்தை தவிர்ப்பது எப்படி



முதலில் அந்த எண்ணம் எழும்போதே நம் நலம் விரும்பிகள், நல்ல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. பின்னர் மனநல ஆலோசகரை சந்திக்க வேண்டும். நம் மாவட்டத்தைப் பொறுத்தவரை இவ்வழியில் பலரை தற்கொலை எண்ணத்தில் இருந்து மாற்றி நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளோம்.



மாணவர்கள், இளைஞர்கள் போதையால் தடம் மாறுவது ஏன்



இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாததே. ஒவ்வொன்றை பற்றியும் பள்ளிப் பருவத்திலேயே அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது அரசு உத்தரவுபடி பள்ளி, கல்லூரிகளில் முகாமிட்டு இதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X