ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கலான 4 மனுக்களும் ஏற்கப்பட்டன.
சத்திரப்பட்டி ஊராட்சி தலைவர் இந்திரா இறந்ததைத் தொடர்ந்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வரும் அக். 9ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இங்கு சாரதா, மாற்று வேட்பாளராக சியாமளா மனு தாக்கல் செய்து இருந்தனர். இதே போல் மாலா, மாற்று வேட்பாளராக ஜெயலட்சுமி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நான்கு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அம்பிளிக்கை, கேதையுறும்பு, லக்கையன்கோட்டை, தங்கச்சியம்மாபட்டி ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு வார்டு உறுப்பிரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. அம்பிளிக்கை ஊராட்சி, வார்டு உறுப்பினருக்கு (வார்டு 5) 4 மனுக்கள் பெறப்பட்டது. இதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. லக்கையன்கோட்டை (வார்டு 3), கேதையுறும்பு (வார்டு 2) ஆகிய ஊராட்சியில் தலா 2 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தங்கச்சியம்மாபட்டியில் (வார்டு 1) தாக்கல் செய்த 4 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.