பழநி : பழநி வட்டார வேளாண் துறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி, வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் வணிகம், விற்பனை,, பட்டு வளர்ச்சி, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கூட்டுறவு போன்ற பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் 7 ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை, உதவி இயக்குனர் மீனாகுமாரி, தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலமுருகன் கலந்து கொண்டனர். கலிக்கநாயக்கன் பட்டி, பச்சளநாயக்கன் பட்டியில் கிராம தரிசு நிலத்தை ஆய்வு செய்தனர்.