தொழு நோயாளிகளை பொது மக்கள் ஒதுக்கக்கூடாது : தேனி நோய் கட்டுப்பாட்டுத்துறை துணை இயக்குனர் ஜி.ரூபன்ராஜ் பேட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
05:39

தேனி : தொழு நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் ஓராண்டில் இருந்து 3 ஆண்டுகள் வரை நோய் தாக்கம் அதிகரிக்கும் நிலை இருப்பதால், முன்கூட்டியே பாதிப்பை கண்டறிந்தால் முற்றிலும் குணமாக்கி விடலாம். பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்தினர், உறவினர்கள் தீண்டத்தகாதவர் போல் ஒதுக்குவது தவறு. மாறாக அவர்களுக்கு ஊக்கம் அளித்தால் தொழு நோய் இல்லாத நிலை உருவாக்கிடலாம். அதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, மாவட்ட தொழு நோய் கட்டுப்பாட்டுத்துறை துணை இயக்குனர் டாக்டர் ஜி. ரூபன்ராஜ் தெரிவித்தார்.



மாவட்ட தொழு நோய் கட்டுப்பாட்டுத்துறையில் துணை இயக்குனர், 2 மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்கள், 3 உடல்நல ஆய்வாளர்கள், ஒரு நலக்கல்வியாளர், 8 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் நர்ஸ்கள் பணியில் உள்ளனர்.தினமலர் நாளிதழின் 'அன்புடன் அதிகாரி' பகுதிக்காக துணை இயக்குனர் அளித்த பேட்டிதொழு நோய் அறிகுறிகள் கண்டறிவது எப்படி'மைக்கோ பாக்டீரியம் லெப்ரே' என்கிற பாக்டீரியாவால் உருவாகக்கூடியது தொழுநோய். பாவம் செய்தோர், பாலியல் தொடர்பில் உள்ளவர்களுக்கு வரும் என்ற தகவல் பரவியிருக்கிறது, இது தவறு. பாதித்தோருடன் நீண்ட நாட்கள் தொடர்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே வருவதற்கான வாய்ப்பு உள்ளன. இக் கிருமி தோலில் பல்கி பெருகும். தோல் வளவளப்பிற்கு ஏற்ற மெலனின் என்ற பிக்மெண்ட் செல் அழிந்துவிடுவதால் தோல் நிறமாறி வெளிறிய வெண்மை நிறத்தில் மாறும். தோலுக்கு கீழ் உள் புறத்தோலுக்கு கிருமி சென்று நரம்புகளில் வளர ஆரம்பித்துவிடும். அதன் பாதிப்பு அதிகரிக்கும் போது கை, கால்கள் முடங்கிவிடும். தோலில் பாதித்து, நரம்புகளுக்கு செல்வதற்கு 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும். அதற்குள் நோய் பாதிப்பை கண்டறிந்து மருந்துகள் எடுத்துக்கொண்டால் பாதிப்பில் இருந்து குணமடைந்து விடலாம்.நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் வராதுஇது தொற்றுநோயாதொற்று நோய் அல்ல. பாதிப்பு ஏற்பட்டவருடன் ஆண்டுக்கணக்கில் தங்கியுள்ளவர்களுக்கு தொழு நோய் தேமல் வரும். இதில் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு தேமல் மூலம் அறிகுறி தோன்றும். எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு தோல் பாதிப்பு அதிகளவில் ஏற்படும். அது மிக அரிதான பாதிப்புத் தான்.மாவட்டத்தில் பாதிப்பு குறைந்துள்ளதாஅதிகம் பாதித்த 60 பேருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். கூடுதல் பாதிப்பு ஏற்பட்டவர்களை மதுரையில் உள்ள தொழுநோய் ஆற்றுப்படுத்துதல் மையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கிறோம். வீடு வீடாக சென்று பரிசோதனை, நோய்கள் கண்டறியும் முகாம்கள் நடத்துகிறோம். அதன் மூலம் மறைக்கப்பட்ட பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய முடிகிறது. பாதிப்படைந்தவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து, குணபடுத்துகிறோம்.நிவாரண ஓய்வூதியம்பாதித்தோருக்கு அரசின் உதவி உண்டாநோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள் மாற்றுத்திறனாளியாக கருதி, அரசு மாதந்தோறும் ரூ.1500 நிவாரண ஓய்வூதியம் வழங்குகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பெற்றுத்

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X