கம்பம் : கம்பத்தில் அரபிக்கல்லுாரியில் ரத்ததான முகாம் கூடலுார் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் சாம்ஜி தலைமையில் நடந்தது. சித்தா டாக்டர் சிராசுதீன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் தாரிக்அகமதுஆலீம் வரவேற்றார். தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். தேனி மருத்துவக்கல்லுாரி ரத்தவங்கி டாக்டர்கள் பாரதி, அனுமந்தன் ரத்தம் சேகரித்தனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.