வடிகால் துார் வாரும் பணி நெடுஞ்சாலை துறை தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
05:41

கோயம்பேடு-கோயம்பேடு 100 அடி சாலை மற்றும் மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மழை நீர் வடிகால் துார் வாரும் பணியில், நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழை நீர் வடிகால் துார் வாரும் பணியில், சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை ஈடுபட்டு வருகிறது.நெடுஞ்சாலை துறை சார்பில், மழை நீர் வடிகாலை துார் வாரும் முகாம், 20ம் தேதி துவங்கியது. நாளை வரை நடக்கிறது.சென்னை மாநகர சாலைகள் கோட்டத்தில், இரண்டு பகுதிகளாக பிரித்து, தினமும் ஒவ்வொரு பகுதியிலும், 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள், எட்டு 'பொக்லைன்' இயந்திரங்கள், எட்டு ஜே.சி.பி., மற்றும் ஒரு சூப்பர் சக்கர் இயந்திரம் வாயிலாக, துார் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் கோயம்பேடு, 100 அடி சாலையில், கத்திப்பாரா மேம்பாலம் கோயம்பேடு வரை உள்ள, 9 கி.மீ., துாரம் உள்ள மழைநீர் வடிகாலை துார்வாரும் பணிகள் நடந்தன.இதைபோல், போரூர் -- மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 6 கி.மீ., துாரம் உள்ள மழைநீர் வடிகால் துார்வாரும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன.துார் வாரும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முக கவசம், பாதுகாப்பு கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் துார் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இது குறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழை நீர் அதிகம் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் துார் வாரும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன' என்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X