ஓட்டல் ஊழியரை தாக்கிய மூவர் கைது | தேனி செய்திகள் | Dinamalar
ஓட்டல் ஊழியரை தாக்கிய மூவர் கைது
Added : செப் 24, 2021 | |
Advertisement
 

மூணாறு : கேரளா, இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் ஓட்டல் ஊழியரை தாக்கிய சம்பவத்தில்பினு 42, விஷ்ணு 27, நிபுன் 32, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மூவரும் தொடுபுழாவில் ஓட்டலில் செப்.19ல் உணவு அருந்தினர்.

எஞ்சிய உணவை பார்சல் செய்து கொடுக்க கூறியவர்கள் அதில் அதிகமாக உணவுகேட்டனர். அதற்கு ஓட்டல் ஊழியர்அசாமை சேர்ந்த நஜ்ரூல்ஹக் 35, மறுத்தார்.ஆத்திரமடைந்த மூவரும் ஊழியரை தாக்கினர். அதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் ஊழியர் அச்சத்தில் யாரிடமும் கூறவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவான ஊழியரை தாக்கும் காட்சி வீடியோ வெளியானது. அதனை பார்த்த தொடுபுழா போலீசார் ஊழியரிடம் விசாரித்து மூவரையும் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X