அயனாவரம்-தள்ளுவண்டி கடையில், மாமூல் கேட்டு மிரட்டிய புகாரில், மேலும் ஒரு ரவுடியை போலீசார் நேற்று கைது செய்தனர்.அயனாவரம், போர்ச்சுக்கீஸ் தெருவில், தள்ளுவண்டி கடையில், உணவகம் நடத்தி வந்தவர் சரவணன், 42. இவரிடம், அயப்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி வினோத், 27, நேற்று முன்தினம் காலை மாமூல் கேட்டு மிரட்டி, 550 ரூபாயை பறித்துச் சென்றார்.இது குறித்து, அயனாவரம் போலீசார் விசாரித்து, வினோத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர்.இதே புகாரில், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்த சதீஷ், 22 என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். ஏற்கனவே, வினோத் மற்றும் சதீஷ் மீது, அயனாவரம் காவல் நிலையத்தில், கொலை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.