இருளால் இன்னல்.. எரியாத உயர் கோபுர மின் விளக்குகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
05:52

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்குகள் எரியாது பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இவற்றை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மாவட்டத்தில் நகர் ,கிராம பகுதிகளில் எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளிலிருந்து முக்கிய சந்திப்புகள் , பஜார்கள் குடியிருப்பு பகுதிகளில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த மின் விளக்குகளால் குறைந்தபட்சம் 50 மீட்டர் துாரம் வரை வெளிச்சம் கிடைக்கும். இதனால் தெருவிளக்குகள் எரியாவிட்டாலும் கூட இதன் வெளிச்சத்தில் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.



இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்குகள் எரியவில்லை. உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்ட ஒரு சில நாட்கள் மட்டுமே எரிகின்றன. அதன் பின் அவைகள் எரிவதில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. அப்படியே எரிந்தாலும் ஒன்று அல்லது இரண்டு விளக்குகள் மட்டுமே எரிகின்றன. இதுவும் போதுமான வெளிச்சம் கொடுப்பதில்லை.



இரவில் பணி முடிந்து வரும் பெண்கள் வெளிச்சம் இன்மையால் அச்சத்துடனே வரவேண்டியுள்ளது. இருளினால் அதிக அளவில் திருட்டு சம்பவங்களும் நடைபெறுகிறது. ஆயுத பூஜை, தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பஜார் பகுதிகளுக்கு பெண்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்க வருவர். விளக்குகள் எரியாததால் அச்சத்துடனே வரவேண்டிய நிலை உள்ளது. கடந்த காலங்களில் இருளை பயன்படுத்தி பல்வேறு திருட்டு சம்பவங்கள்,குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன.



இந்நிலை மீண்டும் தொடராமல் இருக்க கண்டிப்பாக உயர் கோபுர மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்சி பொருளாக உள்ள உயர்கோபுர மின் விளக்குகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் தான் முக்கியத்துவம் கொடுத்து எரிய வைக்க வேண்டும் ...........



பெண்கள் அச்சம்



பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்குகள் எரியாமல் இருப்பது கவலை கொள்ள செய்கிறது. இவற்றைப் பயன்படுத்தி திருட்டு சம்பவம் நடைபெற வாய்ப்புள்ளது .பெண்கள் வெளிச்சமின்றி இரவில் செல்ல அச்சப்படுகின்றனர். விசேஷ நாட்கள் வருவதற்கு முன்பாக நகர் ,கிராம பகுதிகளில் எரியாமல் உள்ள உயர் கோபுர மின் விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலசுப்பிரமணியன், சமூக ஆர்வலர், சிவகாசி.......................

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X