'ரெய்டு': வட்டி கடைக்காரர்களிடம் 'கிடுக்கிப்பிடி': 32 இடங்களில் வருமான வரி சோதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 செப்
2021
12:13
பதிவு செய்த நாள்
செப் 24,2021 05:52

சென்னை:சென்னையில், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மற்றும் சிறிய நிதி நிறுவனங்கள் தொடர்புடைய 32 இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த சில தினங்களுக்கு சோதனை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



நாடு முழுதும், வரி ஏய்ப்பு, ஹவாலா பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, டில்லி, ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களில், சமீப நாட்களாக வருமான வரி அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி, வரி ஏய்ப்பு சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர்.




இந்த வகையில் சென்னையில், சிறிய அளவிலான நிதி நிறுவனங்கள், வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்வோர் வாயிலாக, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடப்பதாக, வரித்துறைக்கு புகார்கள் வந்தன.அதன் அடிப்படையில், சென்னையில் உள்ள வட்டிக்கடைக்காரர்கள், சிறியளவில் நிதி நிறுவனம் நடத்துவோர் சம்பந்தப்பட்ட இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள், நேற்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சென்னை, புரசைவாக்கம், தாசப்பிரகாஷ், எழும்பூர், சவுகார்பேட்டை, பாரிமுனை, தி.நகர் உட்பட 32 இடங்களில், 150க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.




இதில், வரி ஏய்ப்புக்கான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. வரி ஏய்ப்பு நிறுவனங்கள் என வரித் துறை தயாரித்துள்ள பட்டியல் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது.இதனால், அடுத்த சில தினங்களுக்கு, மேலும் சில நிறுவனங்களில் சோதனை நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் சோதனை நடத்துவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.




இது குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், சிறிய நிதி நிறுவனம் நடத்துவோரிடம், ஹவாலா பணப் புழக்கம் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் வரி ஏய்ப்பு செய்வதாகவும் வந்த புகார்கள் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.இதுவரை 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்துள்ளது. வரி ஏய்ப்புக்கான பல்வேறு ஆவணங்கள் இந்த நிறுவனங்களில் சிக்கி உள்ளன. முழுமையான சோதனை முடிந்த பின், முழு விபரங்களை வெளியிடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



தொழிலதிபரிடம் விசாரணை!



சவுகார்பேட்டையில் கற்பூரம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இதில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாகவும், வெளிநாடுகளில் இருந்து கற்பூரம் தயாரிக்கும் மூலப்பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, அந்த தொழிலதிபரிடம் விசாரணை நடந்து வருவதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X