தற்கொலை சம்பவங்கள் இன்றைய மின் தடை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
05:56

தண்டையார்பேட்டை: சென்னை தண்டையார்பேட்டை படேல் நகரைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன், 28; தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்தார். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவர், அறைக்குள் உறங்கச் சென்றார்.காலை வெகுநேரமாகியும் அறை கதவு திறக்காததால், சந்தேகமடைந்த தாய் சந்திரா, திறக்க முயற்சித்தார். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, யோகேஸ்வரன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.ஆர்.கே.நகர் போலீசார் உடலைக் கைப்பற்றி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தால் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.எண்ணுார்: சென்னை எண்ணுார், சத்தியவாணி முத்துநகரைச் சேர்ந்தவர் நாகராஜ், 39; பழ வியாபாரம் செய்தார். இவர் மனைவி நளினி. தம்பதிக்கு ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர்.கொரோனா ஊரடங்கில் வேலை இல்லாததால், வீட்டருகே உள்ளவரிடம் 20 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர் திருப்பிக் கேட்ட போது இவரால் தர முடியவில்லை. இதனால், கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை நளினி வேலைக்கு சென்றுள்ளார். குழந்தைகள் விளையாட சென்றுள்ளனர்.இந்த நேரத்தில், படுக்கை அறையில் துாக்கிட்டு நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணுார் போலீசார், உடலைக் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.பட்டாபிராம்: பட்டாபிராம், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் ரேணுகா, 49; ரயில்வே ஊழியர். இவரது மகன் ராகேஷ், 20. இவர் தினமும் வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இதை ரேணுகா கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ராகேஷ், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின்படி, பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X