வில்லிவாக்கம்-சமூக நலத் துறை சார்பில், 'ஆரோக்கியமான வாழ்க்கை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்' என்ற தலைப்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில், சென்னையில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. வில்லிவாக்கம், சிட்கோ நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100 கர்ப்பிணியருக்கு அரசு சார்பில் நேற்று வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.அவர்களுக்கு, வில்லிவாக்கம் எம்.எல்.ஏ., வெற்றி அழகன் சார்பில் புடவையும், அரசு சார்பில் சீர்வரிசைகளும் வழங்கப்பட்டன.