கொடுங்கையூர், செப். 24-காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 27; 'பேன்சி ஸ்டோர்' வைத்துள்ளார். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த, 25 வயது பெண் ஒருவர் அடிக்கடி அழகு சாதன பொருட்கள் வாங்க வந்துள்ளார்.அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வாலிபர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இதனால், இளம்பெண் மூன்று மாதம் கர்ப்பமாகியுள்ளார். தற்போது, திருமணம் செய்து கொள்ள வாலிபர் மறுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அப்பெண், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.அதன்படி நேற்று காலை, தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பெண் கூறிய குற்றச்சாட்டு உண்மை என தெரிந்ததால், வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.