தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா | சென்னை செய்திகள் | Dinamalar
தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
05:58

எம்.கே.பி. நகர்-தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வகுப்பறை மூடப்பட்டது.சென்னை எம்.கே.பி., நகர், 19வது தெருவில், தனியார் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 40 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதில், பிளஸ் 1 மாணவர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. உடனடியாக மாணவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அவருடன் தொடர்பில் இருந்த மூன்று ஆசிரியர்கள், ஐந்து மாணவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மேலும், பிளஸ் 1 வகுப்பு அறை முழுதுதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X