மாதவரம்--கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.மாதவரம் முத்துமாரி அம்மன் கோவில் தெருவில் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றுள்ளனர்.மாதவரம் போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்த போது, அவர்களிடம் 2 கிலோ கஞ்சா சிக்கியது.விசாரணையில் அவர்கள் மாதவரம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த சுரேந்தர், 23, கொடுங்கையூர், நாராயணன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சரண், 27, ஆகியோர் என தெரிந்தது.அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் நேற்று சிறையில் அடைத்தனர்.