கல்லூரி மாணவியை குத்தி கொன்ற வாலிபர் தாம்பரம் ரயில் நிலையம் அருகே கொடூரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
06:00

சென்னை--காதல் விவகாரத்தில், தாம்பரம் ரயில் நிலைய நுழைவாயிலில் வைத்து, பட்டப்பகலில், கல்லுாரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர், தன் கழுத்தையும் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



சென்னை, குரோம்பேட்டை, பாரதிபுரம், ரவி நகரைச் சேர்ந்தவர் மதியழகன், 50; மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர்.இவரது மகள் ஸ்வேதா, 19; தனியார் கல்லுாரியில் இளநிலை இரண்டாம் ஆண்டு படித்தபடி, கிழக்கு தாம்பரம் தனியார் கல்லுாரியில், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பட்டய படிப்பும் பயின்று வந்தார்.நேற்று மதியம் 1:30 மணியளவில் கல்லுாரிக்கு வந்த அவர், கிழக்கு தாம்பரம், ரயில் நிலைய நுழைவாயில் முன் உள்ள, ரயில்வே குடியிருப்பு பகுதியில், வாலிபர் ஒருவருடன் பேசிக் கொண்டுஇருந்தார். சிகிச்சைஅப்போது, அந்த வாலிபர், திடீரென கத்தியால் ஸ்வேதாவின் கழுத்தை அறுத்து, மார்பு, வயிறு ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தினார். பின், தன் கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.ஸ்வேதா ரத்த வெள்ளத்தில் சரிய, அருகில் வாலிபரும் ரத்த காயத்துடன் கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, இருவரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஸ்வேதாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.தொடர்ந்து, கழுத்தை அறுத்துக் கொண்ட வாலிபருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.அறிமுகம்விசாரணையில், அந்த நபர், நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த ஆதமங்களத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராமச்சந்திரன், 21, என தெரியவந்தது.பொறியியல் பட்டதாரியான இவர், மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.மருத்துவமனையில், போலீசாரிடம் ராமச்சந்திரன் அளித்த வாக்குமூலம்:கடந்த 2019ல், சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு, ஸ்வேதா குடும்பத்தினருடன் ரயிலில் சென்றபோது, எங்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.அப்போது முதல், இருவரும் பழகி வந்தோம். ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய நாங்கள், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தோம். வண்டலுார் உயிரியல் பூங்கா உட்பட சென்னையின் பல இடங்களில் சுற்றினோம். சில மாதங்களாக, ஸ்வேதா என்னுடன் பேசுவதை தவிர்த்தார். அவர் மொபைல் போனில் வேறு யாருடனோ பேசுவதாக சந்தேகப்பட்டேன்.ஸ்வேதா மொபைல் போனை ஆய்வு செய்த போது, ஆண் ஒருவரின் எண்ணை, தோழி பெயரில் பதிவு செய்திருந்தார்.அந்த எண்ணை தொடர்பு கொண்டு நான் பேசியபோது, 'ஸ்வேதாவும், நானும் நண்பர்களாக பழகி வருகிறோம். நீங்கள் நினைப்பது போல், எங்களுக்குள் ஒன்றுமில்லை' என, அந்த நபர் கூறினார்.இந்த விபரம் தெரிந்து, ஸ்வேதா என்னிடம் கோபப்பட்டார். நான் பலமுறை எடுத்துக் கூறியும், அவர் கேட்காமல், என்னைவிட்டு விலகி செல்ல முயன்றார். இதனால், கடைசியாக பேச வேண்டும் எனக்கூறி, ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றேன்.பரபரப்புஅங்கு வைத்து பேசியும், அவர் கேட்கவில்லை. இதனால், ஏமாற்றம் தாங்காமல், நான் எடுத்துச் சென்ற கத்தியால் அவரை குத்தி கொலை செய்தேன். நானும் தற்கொலை செய்து கொள்வதற்காக கழுத்தை அறுத்து கொண்டேன்.இவ்வாறு, வாக்குமூலம் அளித்துள்ளார்.ராமச்சந்திரனை கைது செய்து, சேலையூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை, தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X