சென்னை--சென்னையைச் சேர்ந்தவர், கோகுலகிருஷ்ணன். இவர், 90 சதவீதம் பார்வை திறன் குறைந்த மாற்றுத்திறனாளி. பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால், சி.ஏ., எனப்படும், பட்டய கணக்காளர் படிப்பின் இறுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.இவரது தாய் விஜய லட்சுமி, 'ஸ்கிரைப்' எனப்படும், தேர்வு எழுதுவதற்கான உதவியாளராக செயல்பட்டார். இசைத் துறையிலும் புலமை பெற்றுள்ள இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில், மனம் தளராமல், கடும் முயற்சிக்குப் பின், இந்த சாதனையை படைத்துள்ளார். தற்போது, பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.சாதாரண மாணவர்களுக்கே சவால் வாய்ந்ததாக கருதப்படும், சி.ஏ., தேர்வில், பார்வை திறன் மாற்றுத்திறனாளியான கோகுலகிருஷ்ணன் சாதித்ததற்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.