வரவு - செலவு விபரம் கோரி மனு | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
வரவு - செலவு விபரம் கோரி மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
06:04

பள்ளிப்பட்டு--ஒன்றியத்தில், ஒன்றரை ஆண்டுகளாக நடந்த வரவு - செலவு குறித்த விரிவான அறிக்கை வேண்டும் என, ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம், நேற்று, மனு அளித்தனர்.பள்ளிப்பட்டு ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, திருத்தணி கோட்டாட்சியரிடம், ஒன்றிய கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.இந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட வரவு - செலவு குறித்த விரிவான அறிக்கை வேண்டும் என, ஒன்றிய கவுன்சிலர்கள், பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் பசுபதியிடம் மனு அளித்தனர்.ஒன்றிய குழு கூட்டமும், போதிய கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாததால், ஒத்தி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X