திருவாலங்காடு--திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'கற்போம் கற்பிப்போம்' இயக்கம் சார்பில், கல்வியின் முக்கியத்துவம் குறித்து, மாணவர் மற்றும் ஊர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாநில கல்வித் துறை மற்றும் அறிவியல் இயக்கம் இணைந்து, ஊர் மக்கள் 100 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில், கற்போம் கற்பிப்போம் இயக்கம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இந்த குழுவினர், நேற்று, மணவூர் ஊராட்சியில் உள்ள, உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், பள்ளி மாணவர் மற்றும் ஊர் மக்களிடையே, நாடகம் மற்றும் பாடல் வாயிலாக கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில், மணவூர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்த், ஊராட்சி தலைவர் அல்லியம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.