கல்லுாரியில் கலந்தாய்வு நிறைவுதிருத்தணி: திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியில், இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, கடந்த, 21ம் தேதி முதல் துவங்கி நேற்று நிறைவடைந்துள்ளது.முதல் இரண்டு கட்ட கலந்தாய்வில், 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நடப்பாண்டில், மொத்தம், 686 மாணவ - மாணவியர் சேர்க்கப்பட உள்ளனர்.நேற்று, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நிகழ்ச்சி நிறைவு பெற்று உள்ள நிலையில், மீதமுள்ள காலியிடங்கள் கணக்கெடுத்து, இறுதி கட்ட கலந்தாய்வு நிகழ்ச்சியில், அனைத்து இடங்களும் நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இறுதி கட்ட கலந்தாய்வு குறித்து, ஒரிரு நாளில், தேதி முடிவு எடுக்கப்படும் என, கல்லுாரி முதல்வர் விஜயலட்சுமி தெரிவித்தார்.