பார்வையற்ற தம்பதி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
பார்வையற்ற தம்பதி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
06:08

நகரி-கண் பார்வையற்ற தம்பதியின் வீட்டில், மர்ம நபர்கள் புகுந்து, 80 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர்.சித்துார் மாவட்டம், சந்திரகிரி அடுத்த, கங்கூடுப்பப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் பாப்பிரெட்டி, 35. இவரது மனைவி ரேவதி, 32. இவர்கள் இருவரும் பிறவிலேயே கண் பார்வையற்றவர்கள். இவர்களுக்கு, 3 - 8 வயதுள்ள மூன்று மகன்கள் உள்ளனர்.இவர்களின் குடும்ப வறுமை குறித்து சமூக வலையதளத்தில் தகவல் வெளியானது. இதை கவனித்த, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் மகனும், அக்கட்சியின் முதன்மை செயலாளருமான லோகேஷ், கட்சியின் சார்பில், 1 லட்சம் ரூபாயை கண் பார்வையற்ற தம்பதியிடம் கொடுத்து ஆறுதல் கூறினார்.இந்த பணத்தில், 20 ஆயிரம் ரூபாயை குடும்ப செலவிற்காக எடுத்துக் கொண்டு மீதமுள்ள, 80 ஆயிரம் ரூபாயை வீட்டில் தகரப் பெட்டியில் வைத்து பூட்டினர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பாப்பிரெட்டி வீட்டில், மர்ம நபர்கள் புகுந்து, தகரப் பெட்டியை உடைந்து, அதிலிருந்த, 80 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர்.இது குறித்து, பாப்பிரெட்டி அளித்த புகாரையடுத்து, சந்திரகிரி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X