பரிசீலனை! * பி.டி.ஓ., அறையில் கூச்சல், குழப்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
06:14

உத்திரமேரூர்-காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளாட்சி பதவி இடங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்ட 21 ஆயிரத்து 605 வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. பல இடங்களில் கூச்சல் குழப்பத்துடன் முடிந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் 25ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர், 98 ஒன்றிய கவுன்சிலர், 274 ஊராட்சி தலைவர் மற்றும் 1,938 வார்டு உறுப்பினர்களுக்கு, நேற்று முன்தினம் வரை வேட்பு மனு பெறப்பட்டது. மொத்தம் 8,603 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.1,807 மனுசெங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர், 154 ஒன்றிய கவுன்சிலர், 359 ஊராட்சி தலைவர் மற்றும் 2,679 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு மனுக்கள் பெறப்பட்டன; மொத்தம் 13 ஆயிரத்து இரண்டு மனுக்கள்.பெறப்பட்ட மனுக்கள் மீதான கூராய்வு எனும் பரிசீலனை, அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் நேற்று நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியத்தில் 571 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வரப்பெற்ற, 1,807 மனுக்கள் மீதான பரிசீலனை, வட்டார வளர்ச்சி அலுவலத்தில் நடந்தது.வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு, பரிசீலனைக்காக வந்தவர்களை சேர்களில் அமர வைக்கப்பட்டனர். ஒருவர் பின் ஒருவராக 'மைக்'கில் அழைத்து, சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுக்கள் மீதான பரிசீலனை செய்ய அனுப்பப்பட்டனர்.உத்திரமேரூர் ஒன்றியம், சிறுமயிலுார் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மீனாட்சி, கணவர் லோகேஷ்காந்தி, ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் வந்தார்.சமாதானம்மீனாட்சி, வேட்புமனு பரிசீலனை காரணமாக, தந்தை லோகேஷ் காந்தியிடம் குழந்தையை விட்டுச் சென்றார். சிறிதுநேரத்தில், தாயை காணாமல் தவித்த குழந்தை 'விர்ர்ர்' என அழத்துவங்கியது.தந்தை எவ்வளவு சமாதானப்படுத்தியும் குழந்தை சமாதானம் ஆகவில்லை. பரிசீலனை முடித்து திரும்பி வந்த மீனாட்சியை பார்த்ததும், குழந்தையின் அழுகை அடங்கியது.காஞ்சிபுரம் மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் சம்பத், 40; இவரது மனைவி அஞ்சலை, 36; உத்திரமேரூர் ஒன்றியம், மேல்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.நேற்று காலை, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வேட்பு மனு பரிசீலனைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில், வேட்பாளர் அஞ்சலையும், கணவர் சம்பத்தும் காத்திருந்தனர்.அப்போது, சம்பத்தின் தந்தை நாகப்பன், 65, உடல்நலக்குறைவால் இறந்தார் என்ற தகவல் சம்பத்திற்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வேட்பாளர் அஞ்சலையும், கணவர் சம்பத்தும் துக்கத்தில் ஆழ்ந்தனர். மாவட்டத்தின் பல இடங்களில் நடந்த வேட்பு மனு பரிசீலனையின் போது அரசியல் கட்சியினர் கூச்சல் ஏற்படுத்தி குழப்பத்தை விளைவித்தனர்.பாதுகாப்புசெங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு பதிவான மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. நுழைவாயில் அருகில், வேட்பாளர்களை விசாரித்து, போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில், வேட்பு மனு தாக்கல் செய்தோருக்கு கட்சியின் அங்கீகார கடிதத்தை, தேர்தல் அலுவலரிடம், அந்தந்த கட்சி நிர்வாகிகள் வழங்கினர். வண்டலுார் போலீஸ் டி.எஸ்.பி., சிங்காரவேலு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.வேட்பு மனு மீதான பரிசீலனை முடிந்துள்ள நிலையில், 'வாபஸ்' பெறுவோருக்கான நேரம் ஒதுக்கப்பட்ட பின், 25ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.போலீசார் பணியில் இல்லைவாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், நேற்று காலை, வேட்பு மனுக்கள் சரிபார்க்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் போலீசார் யாரும் ஈடுபடாததால், வேட்பாளர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்த முடியாமல் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நெரிசலாக நிறுத்தப்பட்டிருந்தன. தேர்தல் அலுவலர், பி.டி.ஓ., ராஜ்குமார் கூறுகையில், ''பாதுகாப்பு பணிக்கு போலீசாரை அழைத்தேன். அவர்களுக்கு பணி வழங்கவில்லை என, பதில் அளித்து விட்டனர். சின்னம் வழங்கும் தினத்திலாவது பாதுகாப்பு அளியுங்கள் என கேட்டுள்ளேன். அந்த நேரத்தில் எப்படி இருக்குமோ என தெரியவில்லை,'' என்றார்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X