என்ன மர்மம் நடந்ததோ! | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
என்ன மர்மம் நடந்ததோ!
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
06:20

திருப்போரூர் ஒன்றியத்தில் 22 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. தி.மு.க., கூட்டணியான காங்., - மார்க்.கம்யூ., - வி.சி., ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு 'சீட்' வழங்கியுள்ளது. ஆனால், ம.தி.மு.க.,வுக்கு வழங்கவில்லை.கூட்டணி தொகுதி பங்கீடு கூட்டத்தில்கூட, ம.தி.மு.க.,வினர் இரு சீட் கேட்டுள்ளனர். ஒரு சீட் வழங்குவது கட்டாயம் என, தி.மு.க., கூறியுள்ளது. ஆனால் சீட் வழங்காததால், தி.மு.க., கூட்டங்களை ம.தி.மு.க., நிர்வாகிகள் புறக்கணித்து வருகின்றனர்.ம.தி.மு.க.,வினர் கூறியதாவது:'சீட்' தருவதாக கூறினர். என்ன மர்மம் நடந்ததோ, சீட் இல்லை என கூறிவிட்டனர். கேட்டதற்கு சரியான பதில் இல்லை. தனித்து போட்டியிட்டால் நாகரிகமாக இருக்காது என கருதி, போட்டியிடுவதை கைவிட்டோம்.திருப்போரூர் பேரூராட்சியில் சேர்மன், துணை சேர்மன்; ஆலத்துாரில் ஒன்றிய கவுன்சிலர் பதவியை ஏற்கனவே பிடித்துள்ளது. ஒன்றியத்தில் ம.தி.மு.க., பெரும்பான்மையாக உள்ள எங்களுக்கு சீட் கொடுக்காதது ஏமாற்றமாக இருக்கிறது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X