காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் உள்ளன. இதில், நான்கு வார்டுகளில் மட்டுமே ம.நீ.ம., வேட்பாளரை நிறுத்தியுள்ளது. மாவட்டத்தின் ஐந்து ஒன்றியங்களில் 98 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்கள் உள்ளன. இதில் ஓரிடத்தில்கூட ம.நீ.ம., சார்பில் யாரும் போட்டியிடவில்லை. வேட்பாளர் யாரும் கிடைக்காததால் போட்டியிடவில்லையாம்.ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கே போட்டியிட ஆள் கிடைக்காததால், மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு எப்படி வேட்பாளர்களை நிறுத்துவது என, அக்கட்சியினரே விழி பிதுங்கி உள்ளனர். கட்சி நிர்வாகிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, சரிவர பதில் அளிக்காமல் சமாளித்தனர்.போட்டியிடவே ஆள் கிடைக்காத சூழலில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனித்து போட்டி என அறிவித்தது, மற்ற கட்சியினரிடம் சிரிப்பை வரவழைத்துள்ளது.