''கடவுள் சொன்ன நாளில் கண்மணி சிரிக்கும்''
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
06:34

சிவகங்கை அரசு மருத்துவமனை டீன் ரேவதி கூறியதாவது,மகப்பேறு மையத்தில் வசதிகள்சிவகங்கை அரசு மருத்துவமனை சிறப்பு மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் கவனிப்பு மையத்தில் 200, கர்ப்பப்பை பிரச்னை சிகிச்சைக்கு 250, கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு 45 படுக்கைகள் உள்ளன. இரண்டு ஆபரேஷன் தியேட்டர், குடும்ப நலப்பிரிவு, நுண்துளை ஆபரேஷன் பிரிவு செயல்படுகின்றன. தரம் உயர்த்தப்பட்ட வெண்டிலேட்டர் வசதிகளுடன் 30 படுக்கைகள் உள்ளன.மாதந்தோறும் நடக்கும் பிரசவம்இங்கு மூன்று உட்பிரிவுகளின் கீழ் சிறந்த பேராசிரியர்கள் தலைமையிலான டாக்டர்களை கொண்டு உடனுக்குடன் மகப்பேறு, பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கிறோம். கர்ப்பகால சிக்கல் தவிர்த்து இருதய நோய், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்த சோகையுடன் வருவோர் என மாதந்தோறும் இங்கு 400 முதல் 500 பிரசவங்கள் நடக்கிறது.கொரோனாவில் கர்ப்பிணிகள் பாதுகாப்புஇங்கு கொரோனாவால் பாதித்த 818 தாய்மார்களுக்கு சிறப்பு தனி வார்டு ஏற்படுத்தி தரமான சிகிச்சை அளித்து தாய், குழந்தை இருவரையும் எவ்வித பாதிப்பின்றி 'டிஸ்சார்ஜ்' செய்துள்ளோம். இது வரை 297 தாய்மார்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளோம்.கர்ப்பிணிகள் ஆண்டுக்கு வருகைஇங்கு பிரசவம், பச்சிளம் குழந்தை சிகிச்சை, கர்ப்பிணிகள் சிகிச்சைக்கென 2021ல் 14,498 நோயாளிகள் வந்து சென்றுள்ளனர். நடப்பாண்டில் மொத்தம் 5096 பிரசவம் நடந்துள்ளது. கர்ப்பப்பை பிரச்னையுடன் வந்த 92 கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்தோம்.இங்கு தாய்சேய் கண்காணிப்பு எப்படிவாரந்தோறும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களை அழைத்து மறுசீராய்வு கூட்டம் நடத்துகிறோம். அக்கூட்டத்தில் கர்ப்பகால பிரசவ சிக்கல் குறித்து ஆலோசிக்கப்படும். இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும். லக்சயா, டக் ஷிதா பயிற்சி தாய்சேய்களின் நலனில் அதிக அக்கறை எடுத்து வருகிறோம்.குழந்தை திருட்டு, கடத்தலை தடுக்க திட்டமுண்டாஇங்கு வரும் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் மாறாமல் இருக்கவும், திருட்டு, கடத்தல் செய்யாமல் இருக்க பிரசவித்த உடன் தாய், குழந்தை, உதவியாளருக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அட்டையில் உள்ள 'ஜிப்' மூலம் நுண்கதிர் முறையில் 'ஸ்கேன்' செய்யப்பட்டு, குழந்தை கடத்தல், திருட்டு தடுக்கப்படுகிறது.கர்ப்பபை கட்டிகள் அகற்றியதுண்டாஇங்கு சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிகளில் ஒருவருக்கு 6 கிலோ கட்டி இருந்தது. லேப்ராஸ்கோபிக் மூலம் சிறுதுளை வழியே கர்ப்ப பை கட்டி மற்றும் கரு முட்டை கட்டியை அப்படியே அகற்றினோம். அதற்கு பின் பெண்ணை பாதுகாப்புடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். இது போன்று ஏராளமான அறுவை சிகிச்சைகள் மூலம் கர்ப்பிணிகளை பாதுகாத்து வருகிறோம்.மகப்பேறு உயர் மருத்துவ படிப்பு உண்டாதரமான முறையில் செயல்பட்டு வரும் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை மையத்தை தேசிய மருத்துவ குழு கவுன்சில் டாக்டர்கள் ஆய்வு செய்தனர். அவர்களது ஆய்வுக்கு பின் இத்துறையில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக 6 சீட் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளனர். விரைவில் மகப்பேறு துறையில் உயர்கல்வி வகுப்பு துவக்கப்படும்.இங்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிக்கு ''கடவுள் சொல்லும் நாளில் கர்ப்ப பை வாய் திறக்கும், கண் முன் அழகாய் கண்மணி சிரிக்கும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X