திருப்புவனம் : திருப்புவனம் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் தலைவர் சேதுராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. திருப்புவனத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறந்த பின்னும் பூவந்தி காவல் நிலைய வழக்குகள் சிவகங்கை கோர்ட்டில் நடந்து வருகிறது.எனவே அதனை திருப்புவனம் கோர்ட்டுடன் இணைக்க வேண்டும், மானாமதுரையில் இயங்கி வரும் வட்ட சட்ட பணிகளை குழுவை பிரித்து திருப்புவனத்தில் தனியாக திறக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.