காரைக்குடி : காரைக்குடியில் வணிகர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். பொருளாளர் பொசலான், துணை தலைவர் ராஜாமுகம்மது, குலாம், சேகர், சிதம்பரம் பங்கேற்றனர். இரண்டாவது போலீஸ் பீட் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை பாதாள சாக்கடை அமைத்து ரோடு போடாததை கண்டித்து அக்.10ல் ஆர்ப்பாட்டம் செய்வதென தீர்மானித்தனர்.