சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்கூரில் விவசாயிகள் 18 பேருக்கு விவசாய பணிக்கான முன் கடன் திட்டத்தில் ரூ.14.89 லட்சத்தை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.இங்கு தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மூலம் நெல் சாகுபடிக்கு 10 விவசாயிகளுக்கு 2.35 லட்சம், தென்னை சாகுபடிக்கு ரூ.1.50, வாழை சாகுபடிக்கு ரூ.72,000, பப்பாளி சாகுபடிக்கு ரூ.36,000, கரும்பு சாகுபடிக்கு ரூ.1.92 லட்சம், மகளிர் குழுவிற்கு ரூ.8 லட்சம் என ரூ.14.89 லட்சத்தை வழங்கினார். கூட்டுறவு இணை பதிவாளர் ரவிச்சந்திரன், துணை பதிவாளர்கள் செல்வராஜ், வெங்கடலட்சுமி, சங்க தலைவர் சங்கர்ராமநாதன் பங்கேற்றனர்.