விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி உற்பத்தியை பெருக்குவது ஒன்றே குறிக்கோள் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி உற்பத்தியை பெருக்குவது ஒன்றே குறிக்கோள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
06:36

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம்கடல்பகுதி சார்ந்த இடமாக இருந்தாலும் மழையை நம்பி மானாவாரியாக நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்டவேளாண் பணிகள் பல லட்சம் ஏக்கர்பரப்பளவில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகிறது.நிலத்தை மேம்படுத்தவும், விளைச்சலை அதிகரிக்க வேளாண்துறை மூலம் விதைப்பு முதல் அறுவடை, விற்பனை பல்வேறு அரசு உதவிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் டாம்.பி.சைலேஸ் கூறியதாவது:மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி...1,33,823 எக்டேர் பரப்பளவில் நெல், 4036 எக்டேரில் எண்ணெய்வித்துகள்,பருத்தி 6703 எக்டேர், தென்னை 8419 எக்டேர் இது போக சிறுதானியங்கள் 9731 எக்டேர், பயறுவகை 4702 எக்டேர் சாகுபடி நடைபெறுகிறது.

இவ்வாண்டு வேளாண் பட்ஜெட்டில் அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 7 ஊராட்சிகள் தேர்வு செய்து அங்கு விவசாயிகளை கணக்கெடுத்து சிறப்பு கவனம் செலுத்தி வேளாண் பணியில் தன்னிறைவு பெற உதவி செய்கிறோம். மத்திய, மாநில திட்டங்களை செயல்படுத்த இரண்டு துணை இயக்குனர்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர், உழவர்பயிற்சி நிறுவனம், நுண்ணீர் பாசன திட்ட துணை இயக்குனர், 10 உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.மானியம் எதற்காக, எந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.முதல்வரின் நீடித்த மானாவாரி வேளாண் இயக்கம் சார்பில் அங்கக உரம், செயல்விளக்கம், பிரதம மந்திரி சொட்டுநீர் நுண்ணீர் பாசனம் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 75 சதவீதம் வழங்கப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில், அரிசி, பயறு, எண்ணெய் வித்து, விதைகள், நெல் நுண்ணுடோட்டம், பயிர் பாதுகாப்பு, பம்ப் செட் அமைக்க, தார்பாய்க்கு கூட மானியம் வழங்கப்படுகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இயந்திரம்மூலம் நடவு செய்தல், விதைப்பண்ணை உற்பத்திக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுபோக நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு துணை நீர்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் தரைநிலை தொட்டி, ஆழ்குழாய் கிணறு, பம்ப்செட் ஆகியவற்றிற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.வேளாண் பொறியியல் துறையின் பணி பற்றி...செயற்பொறியாளர் கட்டுப்பாட்டில் பொறியியல் துறை செயல்படுகிறது. விவசாயப்பணிகளுக்கு தேவையான நவீன தொழில்நுட்ப கருவிகளைமானிய விலையில் வழங்குவது. அவற்றை எவ்வாறு கையாள்வது போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். மாவட்டத்தில் டிராக்டர், சோலார்பம்ப்செட், சூழற்கலப்பை உள்ளிட்டவைகள்வாங்கவும், இதுதொடர்பாக தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற பொறியியல் துறையை விவசாயிகள் அனுகலாம்.தரிசு (கருவேலம்) நிலங்கள் விளைநிலமாக மாற்றப்படுகிறதா.நிச்சயமாக ஒவ்வொரு ஆண்டும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தரிசுநிலத்தை விளைநிலமாக மாற்ற எக்டேருக்கு ரூ.13,500 மானியம் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு கருவேல மரங்கள் வளர்ந்த பகுதியில் 325 எக்டேரில் பயிர்சாகுபடி நிலமாக மாற்றப்பட்டுள்ளது. நடப்புஆண்டில் 950 எக்டேர் வரை தரிசுநிலங்களை விளைநிலங்களை மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.மாவட்டத்தில் சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளதாமாவட்டத்தில் மானாவாரியாக நெல்சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2 ஆண்டாக மழைப்பொழிவு நன்றாகஉள்ளதால் சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன்படி 2018--19 1,25, 616 எக்டேர், 2019--20ல் 1, 27402, 2020-21 ல் 1,33,823 எக்டேராக அதிகரித்துள்ளது. மேலும் ஜனவரி மழையால் கண்மாய்களில் தண்ணீர் இருந்ததால்இரண்டாம் போகமாக 2766 ஏக்கரில் நெல், பருத்தி சாகுபடி செய்தனர்.2021--22 ல் நெல், சிறுதானியம், எண்ணெய் வித்துகள் 4, 22,130 டன் உணவு தானிய உற்பத்தியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த பரமக்குடி, ராமநாதபுரம்வேளாண் அறிவியல் மையம் மூலம் அதிகமகசூல் தரும் பாரம்பரிய நெல்விதைகள், நவீனதொழில்நுட்ப ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் மண்பரிசோதனை செய்து அதற்கு ஏற்றவாறு களைக்கொல்லி, அடிஉரம் இட வேண்டும். யூரியாவை அதிகளவில் பயன்படுத்தக்கூடாது. நெல்சாகுபடியில் விதைப்பு இயந்திரங்களை பயன்படுத்தினால் செலவுகுறையும், அதிக மகசூல் பெறலாம்.பயிர் காப்பீட்டு, மழை நிவாரணம் கிடைக்கவில்லை என புகார் உள்ளதே.பயிர்காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. 2016--17 முதல் நான்கு ஆண்டுகளில் ரூ.1428.14கோடி அளவிற்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுஉள்ளது. இதுபோக பிரதமரின் கிஷான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் 1, 22,149 விவசாயிகளுக்கு கவுரவ நிதியாக ரூ.168 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோக மழையால்பாதிக்கப்பட்ட 1,30,000 விவசாயிகளுக்கு ரூ.158 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களுக்கு காப்பீட்டு தொகை, நிவாரணத்தொகை வழங்கியுள்ளோம். விடுப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி உற்பத்தியை பெருக்குவது என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறோம்,'.இவ்வாறு அவர் கூறினார்.-

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X