சிவகங்கையில் மழை பதிவு | சிவகங்கை செய்திகள் | Dinamalar
சிவகங்கையில் மழை பதிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
06:44

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு மழை பெய்துள்ளது. விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து நெல் விதைக்கும் பணிக்கு சாதகமாக மழைபெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வடகிழக்கு பருவமழை அக்., நவ., மாதத்தில் பெய்யும். அதற்கு முன் கூட்டியே பரவலாக மழை பெய்துள்ளதால்விவசாய நிலங்களில் உள்ள ஈரத்தினை பயன்படுத்திஉழவு செய்து விதைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

அக்., நவ., மாதத்தில் பெய்யும் பருவமழையால் நெற் பயிர்கள் விளைச்சல் இருக்கும்.மழையளவு மி.மீ.,ல்: சிவகங்கை 22, மானாமதுரை 17, இளையான்குடி 09, திருப்புவனம் 63.60, தேவகோட்டை 5.60, காரைக்குடி 1.20, திருப்புத்துார் 04, காளையார்கோவில் 14.20, சிங்கம்புணரி 52.20 என பதிவாகியுள்ளது. திருப்புவனத்தில் அதிகபட்சமாக 63.60 மி.மீ., பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக காரைக்குடியில் 1.20 பதிவாகியுள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X