சிவகங்கை : மாநில கூடைப்பந்து ஜூனியர் பிரிவு போட்டியில் பங்கேற்க சிவகங்கை மாவட்ட வீரர்கள் தேர்வு இன்று மாலை 4:00 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் என கூடைபந்து கழக தலைவர் மகேஷ்துரை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தினர் ஜூனியர் பிரிவுக்கான மாநில இருபாலர் போட்டியை நடத்த உள்ளது. இதற்காக சிவகங்கை மாவட்ட அணிகளை தேர்வு செய்யும் பணி (செப்.,24) இன்று மாலை 4:00 மணிக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. வயது 18க்கு கீழ் உள்ள ஆண், பெண் இருவரும் பங்கேற்கலாம். வயது வரம்பு 2003 ஜன.,க்கு பின் பிறந்திருக்க வேண்டும். போட்டி தேர்வில் பங்கேற்க பிறப்பு சான்று, பள்ளி உறுதி அளிப்பு சான்று, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஆதார் எண், பள்ளி 'எமீஸ்' எண் போன்றவற்றுடன் நேரில் வரலாம். விபரத்திற்கு 94431 75242ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.