சம்பள பட்டியல் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
சம்பள பட்டியல் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
06:52

காரைக்குடி : அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பள பட்டியலை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளதால் சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

மாவட்ட அளவில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், அலுவலக ஊழியர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் பட்டியல் தயாரித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் கருவூலகத்திற்கு செல்கிறது. அங்கிருந்து மின்னணு பரிவர்த்தனையில் சம்பளங்கள் போடப்படுகின்றன. இம்மாதத்திற்கான சம்பளத்தை பெற செப்., 20 ல் சம்பள பட்டியல் பதிவேற்றம் செய்தபோது உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர், ஊழியர் சம்பள பட்டியல் விபரங்களை ஏற்றும் போது பட்டியலை ஏற்க மறுத்துவிட்டது. இது குறித்து ஆசிரியர், ஊழியர்கள் கருவூலக அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். இன்னும் சம்பள பில் வழங்க 4 நாட்களே உள்ள நிலையில் பட்டியல் வழங்காமல் செப்.,க்கான சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X