மனைவியை கொலை: செய்தவருக்கு ஆயுள் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
மனைவியை கொலை: செய்தவருக்கு ஆயுள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
06:55

ராமநாதபுரம் : மனைவியை கொலை செய்தவருக்கு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.



ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் 35. இவரது மனைவி திருச்சுழி அம்மன்பட்டியை சேர்ந்த அமுதராணி. ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில், முத்துக்குமார் திருட்டுகளில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்கு சென்று வந்தார்.இதனால் இருவரிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முத்துக்குமார் 2012 பிப்.21ல் கமுதி-பெருமாள்தேவன்பட்டி பாலம் அருகே அமுதராணியை அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்தார்.கமுதி போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ.சுபத்ரா கொலை செய்த முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X