உரம் விற்பனையில் முறைகேடு புகாருக்கு கண்காணிப்பு மையம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
உரம் விற்பனையில் முறைகேடு புகாருக்கு கண்காணிப்பு மையம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
06:57

ராமநாதபுரம் : மாவட்டத்தில் உரம் கூடுதல்விலைக்கு விற்பனைசெய்தால், தேவையற்ற இடுபொருட்கள் வழங்குவதால் உள்ளிட்ட புகார்களை மாவட்ட, வட்டார கண்காணிப்பு மையங்களில் விவசாயிகள் புகார் அளிக்கலாம்.



மாவட்டத்தில் 127 தனியார், 134 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உரம் விற்பனை செய்யப்படுகிறது. நடப்பு சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா 2370 டன், டி.ஏ.பி., 1276 டன், பொட்டாஷ் 192டன், காம்பளக்ஸ் 1254டன், எஸ்.எஸ்.பி., 101 டன் இருப்பு உள்ளது.உரம் விற்பனை தொடர்பான புகார்களை விவசாயிகள் தெரிவிக்க வசதியாக மாவட்டம், வட்டாரஅளவில் உரம் கண்காணிப்பு மையங்கள் காலை10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை செயல்படுகின்றன.



விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருட்கள் இணைத்து விற்பனை செய்வது, ஆதார் அட்டை பெறாமல் உரம் விற்பது போன்றவை குறித்து புகார் அளிக்கலாம். இதுதவிர உதவி வேளாண் அலுவலர்களையும், மாவட்ட வேளாண் அலுவலகத்தை 04567-230 387 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் டாம்.பி.சைலேஸ் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X