பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசியை சேர்ந்தவர் சின்னபாப்பா. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் சுடுகாடு அருகே உள்ளது. இதில், அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன், 55, ?என்பவர் விவசாயம் செய்து வருகிறார். நேற்று மாலை, கிணற்றில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்துள்ளது. இது குறித்து, வி.ஏ.ஓ., இளங்கோ பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து சடலத்தை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.