கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே கிருஷ்ணேகானப்பள்ளியை சேர்ந்தவர் ரங்கசாமி, 34, விவசாயி. கடந்த, 18ல் ரங்கசாமியின் தாய் வெங்கட்டமா, 75, என்பவர் வேம்பள்ளி அணை பக்கமாக ஆடுகளை மேய்க்க சென்றவர், சிறிது நேரம் அங்கு தூங்கினார். அப்போது அங்கு வந்த நபர் அவரது பையில் வைத்திருந்த கால் பவுன் தங்க நகையை திருடிச்சென்றார். ரங்கசாமி புகார்படி சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.