கிருஷ்ணகிரி: தளி அடுத்த தேவருளிமங்கலத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 47, விவசாயி. இவர் தன் விவசாயநிலங்களில் பாசனத்துக்கு பைப் லைன் போட்டுள்ளார். இதிலிருந்த எட்டு வாட்டர் பில்டர்கள் கடந்த, 17ல் திருடு போனது. இதன் மதிப்பு, 24 ஆயிரம் ரூபாய். இதுகுறித்து செல்வராஜ் தளி போலீசில் புகார் அளித்தார். விசாரணையை தொடர்ந்து, உத்தனப்பள்ளி அடுத்த லலிக்கலை சேர்ந்த ரகு, 21 என்பவரை போலீசார் கைது செய்தனர்.