மழையின்றி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து குறைவு: தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
10:37

கிருஷ்ணகிரி: மழையின்றி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து குறைந்த நிலையில், நீர் திறப்பு அதிகமாக உள்ளது.


தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால், கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை அணைக்கு வினாடிக்கு, 711 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழையின்றி நேற்று, 495 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து, 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தண்ணீர் திறப்பு, 559 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 1.66 டி.எம்.சி., நீரை தேக்கி வைக்க முடியும். நேற்று முன்தினம் அணை நீர்மட்டம், 51 அடியாக உயர்ந்த நிலையில், 1.54 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது. ஆனால், அணைக்கு நீர்வரத்து குறைந்து, திறப்பு அதிகரித்துள்ளதால், அணை நீர்மட்டம், 50.85 அடியாக குறைந்து நேற்று, 1.53 டி.எம்.சி., நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு வினாடிக்கு, 177 கன அடி தண்ணீர் வலது மற்றும் இடது புற வாய்க்காலில் திறக்கப்படுகிறது. தொடர் மழையால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், அணையிலிருந்து அதிக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X