குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரத்தை சேர்ந்தவர் நடராஜன், 43. இவர் நேற்று முன்தினம் மாலை பைக்கில் குளித்தலை நோக்கி வந்துள்ளார். திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில், இவருடைய பைக்கும், குளித்தலையை சேர்ந்த ரவி என்பவர் ஓட்டி வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இருவரும் படுகாயம் அடைந்தனர். குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நடராஜன் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.