குளித்தலை: குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்., ஈச்சங்காடு பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் மனைவி நதியா, 22. இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த, 20ல் தோகைமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது தந்தை தவசி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.