கரூர்: செல்லாண்டிபாளையம் பகுதியில், வடிகால் பாலம் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். கரூர், செல்லாண்டிபாளையத்தில் வடிகாலுக்கான பாலம் கட்டும் பணி, கடந்த, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகின்றன. இதனால், பள்ளி வேன்கள் மற்றும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் அவ்வழியில் செல்லமுடியாமல், மாற்று பாதையில் சென்று வருகின்றன. அந்த பாதை குறுகிய சாலையில், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கிக் கொண்டு அவதிப்படுகின்றனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். வடிகால் பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.