குன்னுார் : குன்னுார் வெலிங்டனில், ராணுவ வீரர்களுக்கான நீண்ட துார ஓட்டப் போட்டியில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் வீரர்கள் சாதித்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் சார்பில், தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட தென்பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நீண்ட துார ஓட்டப்பந்தயம், நேற்று நடத்தப்பட்டது.பல்வேறு படைப்பிரிவுகளை சேர்ந்த, 12 அணிகள் பங்கேற்றன. 10 கி.மீ., போட்டியில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் முதலிடம், ஹைதராபாத் படைக்கள பயிற்சி மையம், 2ம் இடம் பிடித்தன.
தனிநபர் போட்டியில், 31.36 நிமிடங்களில் கடந்த, மெட்ராஸ் ரெஜிமென்ட் அணியின் ஹவில்தார் பரசப்பா அலிஜோ முதலிடம், 32.50 நிமிடங்களில், ஹைதராபாத் படைக்கள பயிற்சி மையத்தின் நாயக் மோஹித் ரத்தோர், 2ம் இடம் பிடித்தனர்.
மெட்ராஸ் ரெஜிமென்ட் பயிற்சி மைய தலைவர் பிரிகேடியர் ராஜேஷ்வர் சிங், வீரர்களுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கி பேசுகையில், ''அனைத்து ராணுவ வீரர்களும் கடினமான பயிற்சி மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.