நேபாளத்தில் தங்கப்பதக்கம்; சாதனையாளர்களுக்கு வரவேற்பு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
நேபாளத்தில் தங்கப்பதக்கம்; சாதனையாளர்களுக்கு வரவேற்பு
Added : செப் 24, 2021 | |
Advertisement
 

குமாரபாளையம்: நேபாளத்தில் தங்கப்பதக்கம் பெற்ற சாதனையாளர்களுக்கு குமாரபாளையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. குமாரபாளையத்திலிருந்து யோகா மல்யுத்தம் சர்வதேச போட்டிக்கு இந்தியா சார்பில் குமாரபாளையத்திலிருந்து பயிற்சியாளர் இளங்கோவன் தலைமையில் நேபாள நாட்டிற்கு சென்றனர். அங்கு நடந்த போட்டிகளில் யோகாவில் கவின்ராஜ், முகேஷ், தீபிகா மற்றும் மல்யுத்தத்தில் ஜெயா கார்த்திக்குமார், அசோக் பாரதி ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். வெற்றிக்கோப்பையுடன் குமாரபாளையம் வருகை தந்த வீரர்களுக்கு பள்ளிபாளையம் பிரிவு சாலையில், தி.மு.க., நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பட்டாசு வெடித்து, சந்தன மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X