நாமக்கல்: புதுச்சத்திரத்தில் ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனம், மும்பை டாடா சன்ஸ் உதவியுடன் மகளிருக்கு தையற்பயிற்சி நடத்தி வருகிறது. நேற்று பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் பங்கேற்று, பயிற்சி முடித்த முடிந்த, 30 மகளிருக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் தில்லை சிவக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கஜேந்திரன், சண்முகம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.