நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள, 25 பதவிகளுக்கு, அக்.,9ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் நிறைவடைந்ததில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு, அ.தி.மு.க.,- தி.மு.க., உள்பட, 18 பேர் மனு தாக்கல் செய்தனர். அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதேபோல் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு, 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அனைத்து மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 5 ஊராட்சி தலைவர் பதவிக்கு, 32 மனுக்கள் பெறப்பட்டதில் இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 30 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. வார்டு உறுப்பினர் பதவிக்கு, 47 மனுக்கள் பெறப்பட்டதில், 3 மனுக்கள் தள்ளுபடியாக, 44 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மொத்தமாக, 109 மனுக்களில், 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 104 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.