மனைவியை தாக்கிய சோகம்: கணவர் விபரீத முடிவு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
மனைவியை தாக்கிய சோகம்: கணவர் விபரீத முடிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
18:25

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே மனைவியை கோபத்தில் அடித்ததால் மன வேதனையடைந்த கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எருமப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சேகர், 50. கூலி தொழிலாளி. இவரது மனைவி பாப்பா, 42. இவர் தனியார் மகளிர் சங்கத்தில் லோன் வாங்கி கட்டி வந்தார். நேற்று முன்தினம் லோன் கட்ட பணம் வேண்டும் என, சேகரிடம் பாப்பா கேட்டுள்ளார். ஆனால், 'பணம் இல்லை' சேகர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. வீட்டிலிருந்த பணத்தை எடுத்து பாப்பா லோன் கட்டியுள்ளனர். இதையறிந்த சேகர், நேற்று பாப்பாவை தாக்கியதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து அதற்கு வருத்தப்பட்ட சேகர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X