அரசு கொள்முதல் நிலையங்களில் 1 கிலோ நெல்லுக்கு ரூ.1 லஞ்சம்: கீழ்பவானி விவசாயிகள் வருத்தம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
அரசு கொள்முதல் நிலையங்களில் 1 கிலோ நெல்லுக்கு ரூ.1 லஞ்சம்: கீழ்பவானி விவசாயிகள் வருத்தம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
18:28

ஈரோடு: அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (டி.பி.சி.,), ஒரு கிலோ நெல்லுக்கு ஒரு ரூபாய் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நடந்தது. தலைவர் நல்லசாமி தலைமை வகித்தார். செயலாளர்கள் கனகராஜ், விஸ்வநாதன், சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்டம், கீழ்பவானி வாய்க்காலில் கடந்த மாதம், 19ல் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஒரு மாதமாக தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை அரசு, மாவட்ட நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. தற்போது நெல் அறுவடை நடந்து, கொள்முதல் நடந்து வருகிறது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (டி.பி.சி.,) ஒரு கிலோ நெல்லுக்கு, ஒரு ரூபாய் லஞ்சமாக பெறாமல் எங்கும் கொள்முதல் நடக்கவில்லை. இடைத்தரகர்கள் கொண்டு வரும் நெல்லுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதை ஒழுங்குபடுத்த வேண்டியது, அரசின் கடமையாகும் என தீர்மானம் நிறைவேற்றினர்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X