காவிரியில் சாயத்துணிகள் அலசிய விவகாரம்: ஆதாரத்தை கோட்டை விட்ட ஈரோடு அதிகாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
18:28

ஈரோடு: காவிரி ஆற்றில் சாயத்துணிகள் அலசிய பிரச்னையில், வேனை உரியவர்கள் எடுத்து சென்றதால், ஆதாரம் இல்லாததால் வழக்கம்போல நடவடிக்கை கேள்விக்குறியாகியுள்ளது.


ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் நள்ளிரவில், '407' மாடல் வேனில் கொண்டு வரப்பட்ட சாயமேற்றப்பட்ட பெட்ஷீட் மற்றும் துணிகளை, காவிரி ஆற்றில் ஒரு கும்பல் அலசியது. தகவலறிந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதயகுமார் தலைமையிலானோர் சென்றனர். அதிகாரிகளை பார்த்ததும் சாயத்துணிகளை கரையில் விட்டுவிட்டு, பெட்ஷீட்களை ஆற்றில் வீசிவிட்டு ஓடிவிட்டனர். '407' வேனை விட்டு சென்றனர். வேனுக்கு நம்பர் பிளேட், ஆவணம் ஏதுமில்லை. அதே இடத்தில் விட்டுச் சென்றதால், வேனும் நேற்றிரவு மாயமானது. அதிகாரிகளின் மெத்தனத்தால் ஆதாரம் எதுவுமின்றி, இந்த விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கையே கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கனவே காவிரி ஆற்றில் சாயக்கழிவு தாராளமாக பாயும் நிலையில், இந்த செயலும் சேர்ந்துள்ளது, மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதயகுமார் கூறியதாவது: எந்த ஆலையில் இருந்து துணிகள் வந்தது என கண்டுபிடிக்க முடியவில்லை. அவை சாயமிடப்பட்ட துணிகள் அல்ல. பிரின்டிங் செய்த துணிகள்தான். நள்ளிரவு என்பதால், வேனை சோதித்து ஆவணம் கைப்பற்ற முடியவில்லை. ஆர்.டி.ஓ.,விடம் வாகன விபரம் கொடுத்துள்ளோம். காவிரி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் சாயமேற்றிய துணிகளை அலசினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தனிக்குழு அமைத்து, இரவு நேரத்தில் காவிரி கரை, ஆற்றை ஒட்டிய பகுதிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


'கோல்மால் - தில்லுமுல்லு': சாயத்துணிகளை கொண்டு வந்த வேனை, பறிமுதல் செய்து எடுத்துச் செல்லாததால், வேனுக்கு உரியவர் அல்லது வேறு யாரோ மீண்டும் வந்து வேனை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த ஒன்றே அதிகாரிகளின், 'மாமூல்' தில்லுமுல்லுக்கு உதாரணமாகிறது. அதேசமயம் இந்த செய்தியை வெளியிடாமல் இருக்க, பெரிதுபடுத்தாமல் இருக்க, நேற்று முன்தினம் ஒரு நிருபர் தலைமையிலான நிருபர்களுக்கு, பல லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அதில் விடுபட்ட நிருபர்களுக்கு நேற்று, ஆலை உரிமையாளர்கள் மற்றும் சில அதிகாரிகள் மூலம், நேற்றும் சில லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தகவல் பரவி வருகிறது.


உரிமையாளர் யார்? செயற்பொறியாளர் உதயகுமார் மீண்டும் போனில் தொடர்பு கொண்டு கூறியதாவது, ''ஆற்றில் சிக்கிய வாகனம் யாருடையது என்ற தகவல், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து மெயிலில் வந்துள்ளது. அந்த விலாசத்தில் உள்ள வாகன உரிமையாளர் ஆஜராக கடிதம் அனுப்புகிறோம். அவரை விசாரித்தால், எங்கிருந்து துணிகள் எடுத்து வரப்பட்டது என தெரியும். நடவடிக்கைக்கு உதவும்,'' என்றார்.


'இது திருட்டு அல்ல': ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், இப்பிரச்னை குறித்து கேட்டபோது, அமைச்சர் முத்துசாமி நேற்று கூறியதாவது: காவிரி ஆற்றில் சாயக்கழிவு துணிகளை அலசுவது தவறு. இது திருட்டு அல்ல. துணிகள் அலசுவது அவர்களது வேலை, வாழ்க்கை. ஒரு வாரம் அலசாவிட்டால், அவர்களுக்கு சாப்பாட்டுக்கு வழியில்லை. ஒவ்வொரு தவறையும் நாம் சில நியாயத்துடன் அணுக வேண்டியுள்ளது. இது சட்டப்படி தவறுதான். அதற்கான மாற்று வழியை கண்டுபிடிப்பது நிர்வாகம், எங்களது பொறுப்பு. அதேசமயம் அனுதாபப்பட்டு அனுமதிக்க தயாராக இல்லை. இவ்வாறு கூறினார்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X